புதன், 15 ஜூலை, 2020

மருதமகள் கவிதைகள்

1

வெளிச்ச கொக்கன்ன பூத்த

வெண் நாணல் அலக்குறும்

கடுஞ்சூல் வாடையின் போராட்டலில்

பிய்ந்து பரவி விழிவிழும்

நிலம் சுமந்து திரிகையிலும்

இசைபூட்டி மீட்டிய பெயரில்

தொலைந்திருக்கும் இடுக்குகள்

எங்கும் கைத்தடி வைத்து

வளைந்து அகட்டி கால் பரப்பி நிற்கையில்

குந்துதலைப் போன்ற குவியலாக

குவிந்த கள்ளியம் நாட்டில் தேடி

அலைவுறும் நாரத்தை குருவிகளின்

இடைவிடாத கொக்கரிப்பு இல்லை

யோஒஒஒ இந்தப் பாலைலக்குத்தான்

பின்பனித்தானும் உரித்தாமே

 

2

பச்சை வீசிய நடத்தலோடு

நுனிக்கைப் பிடியினுள் தேங்கிய

வெஞ்சூடு உள்ளங்கைத் தாங்கி

அவாவிய தனித்தலில்

இமைச்சுற்றும் கோள்களுக்கு

நடுவில் முறைவந்த

கீச்சொலி பேசியே

கழியும் மாலையும்

நண்பகல் வேனிலும்

ஈங்கிவண் உறைதலில்….

 

 

3

சரம் பிடித்த கரையான்

புற்றின் மண்தேய்த்து

சிரம் வளர்த்துச் சூட்டிய

பச்சைப் பூவிலிருந்து

வழியும் பெருக்கெடுத்த

குண்டு நீரினின் நடுவில்

காயாக இல்லாமல்

கனியக் காத்திருக்கும்

சுற்றத்தில் ஆங்கே

இருகோள்களின் பேரிருளின்

மறைப்பிற்குப் பின்னும்

நெய்தலின் உப்பனைத்தையும்

தின்று தீர்த்த நேரத்தாகத்தில்

அருந்துவது தொங்கலிலோ…..


2019 மார்ச் - மே பருவ இதழில் வெளிவந்த கவிதைகள்


 

 


1 கருத்து:

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...